அத்தனை நல்லவனா நீ

அத்தனை நல்லவனா நீ
திசை தப்பிச் சென்றுவிடுமோ 
என்ற அச்சத்தில்
நான் கரம் பொதிந்து வைத்திருக்கும்
காற்றை விடுவிக்கிறாய்

வெளியைக் கிழித்துக்கொண்டு
சீறிப் பாயும் ஒற்றைக் கோடாய்ப் பறந்தலைகிறது
இன்னமும் பெயரிடப்படாத பல உருவங்கள் 
அங்கு உருவாகி மறைகின்றன 
புலப்படாதவைகளுக்குப் பெயரும்
அவசியமில்லை

எந்நொடியும் திரும்பிவிட முடிவெடுத்து
என்னை நோக்கி விரையலாம்
சற்றே தள்ளி நில்
இம்முறை கைகளை விரித்தே 
வைத்திருக்கப் போகிறேன்.


கனலி ஆறாவது இதழ்

Leave a Reply

%d bloggers like this: