சிக்னல் சந்திப்பு 4

ராப்பூச்சிகளின் சிணுங்கல்
பிளிறலாய் எதிரொலிக்கும் பேரமைதி
அளவெடுத்தாற்போன்ற இடைவெளியைச்
சரியாய்க் கட்டிக்காத்து
விலகாமலும் நெருங்காமலும்
ஒரே தாளநடையில்
நானும் நீயும் 
நிலவும்

சிக்னலுக்குக் கட்டுப்பட்டு 
கோட்டிற்கு முன்பு
நின்று அண்ணாந்து 
நிலவு நோக்குகிறோம்

ஆஅ ஒல் என்ற கூவலொலி
செவிக்குள் முரசுகொட்டுகிறது
எங்கிருந்தெனக் கண்டறிய
சிரமம் ஒன்றும் இருக்கவில்லை நமக்கு 
நிறுத்தப்பட்ட நம் கால்களின்
அடியில் இருந்து நீண்டிருக்கின்றன
லட்சுமணக் கோடுகளைத் தாண்டி
நம் நிழல்கள்.

Leave a Reply

%d bloggers like this: