Author: user

ஓவியம்: ரவி பேலட்
சிறுகதை

அகலாது அணையாது

இதுவரை அவளுக்குச் சரியான ப்ரா அமைந்ததே இல்லை. இந்த விஷயம் அவளுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும் வரை பிரச்சனையாக இல்லை. இப்போது அம்மா எப்படியோ கண்டுகொண்டதுதான் பிரச்சனையே. அம்மாவின் கண்களுக்கு எதுவும் தப்புவதில்லை.