எத்தனை முறை வாசித்தாலும் "நல்ல கவிதைகள் ஒவ்வொரு முறையும் நமக்குத் தருவதற்கென்று புதிதாக ஒன்றைத் தனக்குள் வைத்திருக்கும்" என்ற என் நம்பிக்கை மேலும் வலுபெற்றது.
ஒரு சமூகத்தின் ஐதீகத்தைச் சொல்லி அதன் வரலாற்றை மாற்றப் போகிறாள் மலாலா என்ற அறிமுகமே கதை நகரும் திசைக்கு கோடிகாட்டிவிடுகிறது. அவளுக்குள் சுடராடும் பெருங்கனலுக்கான தீனியாக வேட்டை வலம். மலாலா என்பதுவே வெளிப்படையான குறியீட்டுப் பெயர்தான்.