
தேவதையாகுதல் எளிது
கண்கள் கூசும் ஒளிவட்டத்திற்குள்
கனகச்சிதமாகப் பொருந்தி
அசையவும் தேவையில்லை.



துக்கம் புகுந்த வீடு
அவசரம் அவசரமாக
அந்த வீடு முழுக்க
எல்லா இடங்களிலும்
துக்கம் தெளிக்கப்படுகிறது.