
அகலாது அணையாது
இதுவரை அவளுக்குச் சரியான ப்ரா அமைந்ததே இல்லை. இந்த விஷயம் அவளுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும் வரை பிரச்சனையாக இல்லை. இப்போது அம்மா எப்படியோ கண்டுகொண்டதுதான் பிரச்சனையே. அம்மாவின் கண்களுக்கு எதுவும் தப்புவதில்லை.

நோக்குங்கால்
அதே மொட்டை மரத்தின் உச்சிக்கிளையில் சூரிய ஒளியில் மின்னும் நீல நிறம். அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் அந்தக் கணம் கேட்கும் ஒற்றைக் குரலாக அதன் குரல். அந்தப் பகுதி முழுதும் தன் குரலால் இணைத்துவிடும் பிரயத்தனம் போல

அகண்
இரத்தமேதான் அங்கு கொட்டிக்கிடக்கிறது. அதில் ஒரு கரு உருண்டை மிதக்கிறது. இரண்டும் திரவம்தான். ஆனால் ஒன்றில் ஒன்று கலக்காமல் தனித்திருக்கின்றன. உற்றுப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது, மனிதக் கருதான்.

காத்திருப்பு
‘சைனீஸ் கார்டன்’ அறிவிப்பைத் தொடர்ந்து எம்ஆர்டியில் இருந்து இறங்கியதுமே ஏதோவோர் அமானுஷ்ய அமைதி. முதல் தளத்தில் இருந்தபடியே கார்டன் இருக்கும் திசையில் பார்த்தாள். ஹோவென்ற பெருவெளி விழுங்கிவிடுவதைப் போல் கைகளை அகல விரித்துக் கிடந்தது.