நிறைசூல் மேகம்

நிறைசூல் மேகத்தின்
இடி முழக்கத்திற்குப் பணிந்தாற்போல
கூட்டிற்குள் ஒளிந்துகொள்ளும் 
அவசரத்துடன் படபடக்கின்றன 
சிறு குருவிகள் 

மொத்தத்தையும் உறிஞ்சிவிடத் துடிக்கும்
தாகத்துடன் வாய் பிளந்து
மேல் நோக்கிக் காத்திருக்கின்றன
உலர் நிலங்கள்

பெரும் ஆவேசத்துடன் மண் கலைத்து
புழுதிகள் சூழ மரங்களை ஆவேசத்துடன்
அசைத்துத் தழுவிக் கொண்டிருக்கிறது 
காற்று

இலை பருவத்து மழை நாட்களின்
களிப்பைத் தொட்டு மீளும் சருகுகள்
கருமேகங்களை இறைஞ்சுகின்றன
இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது
காற்றுடனான உறவாடல் என.

Leave a Reply

%d bloggers like this: