பெருமரத்தின் அடிக்கிளை

பெருமரத்தின் அடிக்கிளை தளிர் இலையும் 
தப்ப முடியாதபடி ஒளி பாய்ச்சி 
தகிக்கும் நிலவின் நிழல்கூட
நெருங்க முடியாமல்
தன்னிறைத்துக்கொள்ளும் அவள்
நள்ளொலி மட்டுமே போர்த்தி 
பற்றிப் படரும் நிர்வாணத்தால்
உலகை வென்ற களிப்பில்
அவ்விரவைக் கழிக்கிறாள்

யுகம் வாழ்ந்த நிறைவைப் 
பூசிக்கொண்ட முகத்தைக்
கரம் குவித்து ஏந்தியபடி
எதிரெழும் எரிகதிரின்
தண்ணொளியில் உறைகிறாள்
அசைவுகள் துறந்து 
அதுவரை காத்திருந்த அரவமாய் 
மெல்ல கண் விழிக்கிறது அவளுடல்.

Leave a Reply

%d bloggers like this: