அந்தச் சொல்

அந்தச் சொல் அப்படியொன்றும் கனமில்லை
ஈர மண்ணில் சொத்தென்று விழுந்த
சிறு கூழாங்கல்லாய்
நிலமொட்டி ஆழம் கொண்டது
அதன் மீதேறி அமர்கிறது
குறிபார்த்து வீசப்பட்ட 
இன்னொன்று

சொல் சொல் சொல்
உயரே உயரே

சருக்கல் சந்தர்ப்பங்களில் 
கவனம் குவிய
அவசரநிலைப்பிரகடனமாய்
நிதானம்
சுற்றி வலம் வரும் 
ஆலோசனைகள் அறிவுரைகள்
எட்ட நின்று கண்காணிப்புப் பணிகளில்
சில நலம்விரும்பிகள்

இளங்காற்றில் பறந்தலையும் காகிதப்பூவின் காம்புநுனி 
உரசிச் செல்ல
விட்டு விடுதலையாகின்றன
அடிக்கல் மட்டும் அதே இடத்தில் அதே நிலையில் 
அசையாமல் 
இறுகி
உருமறைப்பில் உலர்நிலத்துடன்

Leave a Reply

%d bloggers like this: