சிக்னல் சந்திப்பு 2

வெறிச்சோடி இருக்கும்
யாருமற்ற 
எதுவுமற்ற 
சாலையில்
சிக்னலுக்குக் காத்திருக்கும் அவன்
தனக்குள் எதையோ
முணுமுணுத்தபடி சிவப்பு நிறத்தை
வெறிக்கிறான்.
சாலையின் குறுக்கே அசாதாரணமாய் 
நீண்டு படுத்திருக்கும் 
சிக்னல் கம்பத்தின் நிழலுக்கும்
அதே முணுமுணுப்பு 
அதே வெறிப்பு
அவன் தவிப்பில் தொற்றிக்கொண்ட நானும்
சிக்னல் சீக்கிரம் விழாதா என்று
பார்த்தபடி இருக்கிறேன்.
பச்சை நிறம் விழுந்ததும்
நிழலை ஒரு முறை கூர்ந்து பார்த்துவிட்டு
மறுபுறம் திரும்பிக்கொள்கிறான்
அவன் கடப்பதாகத் தெரியவில்லை
அவன் தவறவிட்டதையும் சமன்
செய்வதைப் போல
என் கால்கள் துரிதமாக ஓடிக் கடந்து கொண்டிருக்கின்றன
மறுபுறம் சென்றதும் திரும்பிப் பார்க்கிறேன்
அதே இடத்திலேயே அவன்
அதே முணுமுணுப்பு
அதே வெறிப்பு
கீரை வாங்கக் கிளம்பிய கவிஞனாக
இருக்கக் கூடும்.

Leave a Reply

%d bloggers like this: