சிக்னல் சந்திப்பு 3

உக்கிரமாய்த் தலைக்கு நேர் மேல் 
நின்று தாக்கும் 
சூரியனுடன் போரிட்டு 
வழியும் வியர்வையைத்
துடைக்கவும் மனமின்றி 
சிக்னலில் காத்திருக்கும் வேளையில்
இடது பக்கத்தில் வந்து நின்றான்
தலையில் முக்காடிட்டிருந்தான்

பாதி மறைந்த முகத்தை விடுத்து
தெரிந்த பாதியைக் கூர்ந்து பார்க்கிறேன்
படிமங்களின் உச்சியில் இருந்து
ஒரே தாவலில் குதித்திறங்கி
ஓடி வந்தவனைப் போன்ற பெருமூச்சுடன்
புத்தன்!
நான் அடையாளம் கண்டுகொண்டது
தெரிந்தவுடன் 
சிக்னலுக்குக்கூடக் காத்திராமல்
இடதும் வலதும் திரும்பிப் பார்த்தபடி
நடுப்பாதையில் விரைந்தோடுகிறான்
அவனுக்கும் வியர்வை வழிந்தோடியது 
முதுகு முழுதும் நனைத்து

Leave a Reply

%d bloggers like this: